Monday, January 26, 2009

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக சிங்கள அரசு நடத்தும் போருக்கு கருணாநிதியும் ஒரு பங்காளிதான் எ ம.தி.மு.க.,பொதுச்செயலாளர் வைகோ கூறினார். திருநெல்வேலியில் நேற்று நடந்த ம.தி.மு.க., நகர் செயலாளர் நிஜாம் இல்ல திருமண விழாவில் பங்கேற்ற வைகோ நிருபர்களிடம் கூறியதாவது: இலங்கையில் சிங்கள ராணுவத்திற்கு ஆயுதங்கள், நிதி கொடுத்து இந்திய நிபுணர்களை அனுப்பி வைத்து கடந்த 4 ஆண்டுகளாக மத்திய அரசு உதவி வருகிறது.

தற்போது கடைசி யுத்தம் எனக் கூறி உதவிகள் செய்து வருகிறது. அதைத்தான் ராஜபக்ஷே அண்மையில் டில்லிக்கு வந்தபோது கூறியிருந்தார். இழந்த யாழ்ப்பாணத்தையும் மற்ற பகுதிகளையும் புலிகள் விரைவில் மீட்பார்கள். 50 ஆண்டுகால உரிமைப்போரை தமிழக மக்கள் ஆதரிக்க வேண்டும். இத்தகைய போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது தமிழக அரசு அடக்குமுறையை பிரயோகித்தால் விபரீதம் ஏற்படும். இந்திய அரசின் துரோகத்திற்கு கருணாநிதி தான் பங்காளியாவார். கடந்த 4 மாதங்களாக இலங்கை பிரச்னையில் உயிரைவிடுவோம்; ஆட்சியை இழப்போம்; எம்.பி.,பதவியை ராஜினாமா செய்வோம் என இரட்டை நாடகம் நடத்திடும் கருணாநிதி, தற்போது பொதுக்குழு என கூறிவருகிறார். பிப்., 12ல் டில்லி பார்லி., கட்டடம் முன் நாங்கள் உண்ணாவிரதம் மேற்கொள்ள உள்ளோம். இதனை இருட்டடிப்பு செய்வதற்காகவே பொதுக்குழு என அறிவித்துள்ளார். இவ்வாறு வைகோ கூறினார்.

No comments:

Post a Comment